தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூத்த மகனுக்கு பணம் கொடுத்த ஆத்திரம்... பெற்றோரை சுத்தியால் தாக்கி கொலை இளைய மகன்... - man kills niece with hammer

உத்தரப் பிரதேசத்தில் மூத்த மகனுக்கு பணம் கொடுத்த ஆத்திரத்தில் இளைய மகன் பெற்றோரை சுத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

up-man-kills-parents-niece-with-hammer-surrenders-later
up-man-kills-parents-niece-with-hammer-surrenders-later

By

Published : Jul 26, 2022, 2:09 PM IST

லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சவுரப் (22) என்பவர் இன்று (ஜூலை 25) தனது தந்தை ஓம்பிரகாஷ்(62), தாய் சோமவதி (60), அண்ணன் மகள் சிவா (4) மூவரையும் சுத்தியல் மற்றும் செங்கலால் தாக்கி கொலை செய்தார். இதையடுத்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "ஓய்வுபெற்ற அரசு ஊழியரான ஓம்பிரகாஷ், தனது மூத்த மகனுக்கு உடற்பயிற்சிக் கூடம் அமைக்க நிதியுதவி அளித்துள்ளார். இதனால், வேலையில்லாமல் இருக்கும் சவுரப் தனக்கும் தொழில் தொடங்க நிதிஉதவி வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால், ஓம்பிரகாஷ் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுரப் மூன்று கொலைகளை செய்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.


இதையும் படிங்க:காதல் ஜோடி வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை வெறிச்செயல்

ABOUT THE AUTHOR

...view details