தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய அரசியல் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த யோகி.. 'எக்ஸ்' தளத்தில் 26 மில்லியன் பாலோயர்கள்! - உத்திர பிரதேச முதலமைச்சர்

Yogi adityanath X followers increase: இந்திய அரசியல் தலைவர்களின் 'எக்ஸ்' தளத்தில் அதிக பாலோயர்கள் கொண்ட மூன்றாம் அரசியல் தலைவராக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உருவெடுத்துள்ளார்.

இந்திய அரசியல்வாதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தார் உபி முதலமைச்சர்
இந்திய அரசியல்வாதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தார் உபி முதலமைச்சர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 1:16 PM IST

உத்தரபிரதேசம்:'எக்ஸ்' சமூக வலைத்தளம் கடந்த 30 நாட்களில் நிறுவனங்கள் மற்றும் தனிநபரின் எக்ஸ் கணக்குகளில் எவ்வளவு பாலோயர்கள் (followers) அதிகரித்து உள்ளனர் மற்றும் முன்னிலையில் இருப்பவர்களின் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

'எக்ஸ்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி அதித்யநாதின் 'எக்ஸ்' கணக்கில் நேற்றைய (செப்.6) தேதி வரையில் 26 மில்லியன் பலோயர்களை அதாவது இரண்டரை கோடி பாலோயர்களை கடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தை பிடித்த யோகி அதித்யநாத்

மேலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் சாவை தொடர்ந்து முதலமைச்சர் யோகி அதித்யநாத் மைல் கல்லை தாண்டியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்களின் 'எக்ஸ்' தளத்தில் அதிக பலோயர்கள் கொண்ட மூன்றாம் அரசியல்வாதியாக உத்திரபிரதேச முதலமைச்சர் உள்ளார் என தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ஜி20 பாரத் மண்டப முகப்பில் தஞ்சை நடராஜர் சிலை.. வடிவமைப்பின் ரகசியம் பகிர்ந்த சிற்பி!

கடந்த 30 நாளில் அதிக பாலோயர்கள் பெற்ற தனி நபர் மற்றும் நிறுவனங்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு பிறகு உத்தரபிரதேச முதலமைச்சருக்கே அதிக படியான பாலோயர்கள் அதிகரித்துள்ளனர் எனவும், கடந்த 30 நாட்களில் பிரதமர் மோடிக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 419 பலோயர்கள் வந்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தது.முன்னதாக கடந்த 2022ல் வெளியிடபட்ட அறிக்கையில் யோகி அதித்யநாதின் 'எக்ஸ்' கணக்கில் 8 மில்லியன் பாலோயர்கள் அதிகரித்திருந்தது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:ஜி20 மாநாட்டில் விருந்து எப்படி? - சிறப்பு தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details