உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் கோமதி நதியை மேம்படுத்தும் திட்டத்தை முந்தைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு முன்னெடுத்தது. இதற்காக ரூ.1,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திட்டத்திற்காக ரூ.1,437 கோடி செலவிடப்பட்ட நிலையில், 60 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு அங்கு பாஜக தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பின், திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு சமர்பித்த விசாரணை அறிக்கையை உத்தரப் பிரதேச அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது. அதன்பேரில், இந்த புகார் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 40 இடங்களிலும், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒரு இடம் என 42 இடங்களில் சிபிஐ இன்று(ஜூலை 5) சோதனை நடத்தி வருகிறது.
அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு முன்னணி போட்டியாளராக திகழும் அகிலேஷ் யாதவை குறிவைத்து இந்த சோதனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க:மோடி எஃபக்ட்: வேலையை துறந்து டீ கடை வைத்த பொறியாளர்