லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 29) தூங்கிக்கொண்டிருந்த 16 வயது சிறுமி மீது இளைஞர் ஒருவர் ஆசிட் அடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில், சிறுமியும் அருகில் உறங்கிக்கொண்டிருந்த அவரது சகோதரனும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து இருவரையும் உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனிடையே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான சிறுமியும், இளைஞரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இதற்கிடையில், சிறுமிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், சிறுமி மறுப்பு தெரிவிக்க ஆத்திரமடைந்த இளைஞர், நேற்று(ஆகஸ்ட் 29) சிறுமியின் மீது ஆசிட் அடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:உபியில் காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு