டெல்லி : உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு (2022) முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் வியாழக்கிழமை (ஜன.13) முதல்கட்டமாக 125 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த 125 பேரில் 50 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஷா சிங்கும் உள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, 125 பேரில் 40 சதவீதம் பெண்கள், 40 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் மாநில வளர்ச்சிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார். உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ அவுட்