மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி, ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார். ஒடிசா மாநிலம் பொடசுலா சாக் பகுதியில் இவரது கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ட்ராக்டரில் மோதி விபத்துக்குள்ளானது.
சாலை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி - மத்திய அமைச்சர் ஒடிசாவில் விபத்துக்குள்ளானர்
மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.
Pratap sarangi
இதில் மத்திய அமைச்சர் சாரங்கி, அவரது கார் ஓட்டுநர் இருவரும் காயமடைந்துள்ளனர். இருவரும் தற்போது பலசோர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தகவல் கூறப்பட்டுள்ளது.
சம்பவயிடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறையினர் விபத்தின் பின்னணி குறித்து விசாரித்துவருகின்றனர்.