தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசுத் துணைத் தலைவரைச் சந்தித்த எல். முருகன்! - pm modi

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் டெல்லியில் சந்தித்தார்.

union minister l murugan
வெங்கையா நாயுடு

By

Published : Jul 17, 2021, 6:22 PM IST

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம்செய்யப்பட்டது. புதிதாக, 43 அமைச்சர்கள் (36 புதுமுகங்கள்) அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் அனைவரும், மரியாதை நிமித்தமாக இன்று குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

குடியரசுத் துணைத்தலைவரைச் சந்தித்த எல். முருகன்

டெல்லி ராஷ்டிரபதி நிவாஸில் வெங்கையா நாயுடுவை, புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது மத்திய அமைச்சர் ஸ்ரீ பர்ஷோட்டம் ரூபாலாவும் உடனிருந்தார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details