டெல்லி:மத்திய சமூக நீதித்துறை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் (ஆர்.பி.ஐ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே நேற்று (ஜன. 16) டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "எனது கட்சி சார்பாக, 2021ஆம் ஆண்டில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அனைத்து சாதியினரும் சமூகத்தில் அவர்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் உள்ளது என்பதை அறிவர்.
நடப்பாண்டில் தனது கட்சி விரிவாக்கம் குறித்து திட்டமிட்டுள்ளோம். இந்தக் கணக்கெடுப்பு தனது கட்சியில் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால், வேளாண் சட்டங்கள் குறித்து குழுவை அமைத்துள்ளதால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குக் கீழ்படிய வேண்டும்.
இந்த வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற்றால், பிற செயல்களையும் திரும்பப் பெறுமாறு மக்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பர். இது இந்திய நாடாளுமன்றத்தின் கௌரவத்திற்கு நல்லதல்ல" என்றார்.
மேலும் பேசிய அவர், திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நான்கு நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆதாரங்களை வழங்கிய போதிலும் அனுராக் காஷ்யப் மீது மும்பை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதவுள்ளேன்" எனத் தெரிவித்தார்.