டெல்லி:எந்த நேரத்திலும் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு தயாரக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று (ஆக.31) தெரிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யா காந்த் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதற்கான ஆவணங்களை இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். ஜம்மு-காஷ்மீரில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் ஏற்கனவே, முடிவடைந்த நிலையில் விரைவில் கார்கில் பகுதியில் வரும் செப்டம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.
மாநகராட்சி தேர்தலும், மூன்றாவது சட்டப்பேரவை தேர்தலும் இதே விதிமுறைகளின்படி நடைபெறும் என்றும், ஜம்மு-காஷ்மீரை மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டாலும், அதனை முழுமையாக மீட்டெடுப்பதற்கான சரியான காலக்கெடுவை வழங்க முடியாது என்றும் மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அங்கு 45% பயங்கரவாதங்களும், 90.2% ஊடுறுவல்களும், 65.9% பாதுகாப்பு பணியாளர்கள் உயிரிழப்பும், 97% கல்வீச்சும் என குறைந்துள்ளதாகவும்; இதுவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறாகவும் மத்திய அரசு தரப்பில் மேத்தா தெரிவித்தார்.
1767 மற்றும் 2018-ல் நடந்தத கல்வீச்சுகள் தற்போது இல்லையெனவும்; திறமையான பாதுகாப்பு பணியாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் பிரிவினைவாத சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். அப்போது ஒரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்றத்தில் மேத்தா முன்வைத்தவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறதா? என்றும் மனுதாரர்களின் பார்வையில், நீதிமன்றம் அதை பரிசீலிக்கிறதா? என கேள்வி எழுப்பினார். இதை அறிவது பொருத்தமானது என்று கபில் சிபல் வலியுறுத்தினார்.
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான இந்த உண்மைகள் அரசியலமைப்பு சட்டத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று என கபில் சிபிலுக்கு தலைமை நீதிபதி தெளிவுபடுத்தினார். இதனை மனுதாரர்கள் ஏற்கவேண்டும் என கபில் சிபில் கூறினார். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான வரைபடத்தை நீதிமன்றம் கோரியதாகவும், அதற்கு தங்கள் பதிலை வழங்கியுள்ளதாகவும் கபில் சிபிலிடம் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த உண்மைகள் நீதிமன்றத்தின் மனதிற்குள் செல்லும் என கடுமையாக கபில் சிபில் வாதிட்டார். இந்நிலையில், 5000 பேர் வீட்டுக் காவலில் இருக்கும்போது, மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், எப்படி பந்த் நடத்த முடியும்? மேத்தா அளித்த உண்மைகளை கருத்தில் கொள்ள வேண்டாம்; இல்லையெனில், அவர்கள் அதை எதிர்க்க வேண்டியிருக்கும் என்று சிபல் நீதிமன்றத்தை வலியுறுத்தி கேள்வியெழுப்பினார்.
370வது பிரிவை ரத்து செய்தப் பின், நிதிமன்றத்தில் மத்திய அரசு கூறும் வளர்ச்சியின் தன்மை அரசியலமைப்புக்கு சவால் ஆனது என்றும் இது அரசியலமைப்புக்கு பொருந்தாது என்றும் தலைமை நீதிபதி கூறினார். ஆனால், உண்மைகள் பதிவு செய்யப்பட்டதாக சிபில் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தை அமைக்க காலமெடுக்கும், இந்நிலையில் அங்கு வளர்ச்சி பணிகள் நடந்துவருவதோடு உறுதித்தன்மை வந்துள்ளதாகவும் தலைமை நீதிபதி கூறினார்.