இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கூடுகிறது.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரையில் ரேஷனில் உணவு தானியங்கள் இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.