தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அமைச்சரவை மாற்றம்- புதுமுகங்களுக்கு வாய்ப்பு? - மத்திய அமைச்சரவை

மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Union cabinet
Union cabinet

By

Published : Jun 19, 2021, 7:06 PM IST

டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவது தொடர்பாக யூகங்கள் உருவாகியுள்ளன.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பது தொடர்பாக விரிவாக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அமைச்சரவையில் சில இடங்கள் காலியாக உள்ளன. லோக் ஜனசக்தி விலாஸ் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், கர்நாடக பாஜக எம்பி சுரேஷ் அகாதி ஆகியோர் மரணம் மற்றும் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளியேற்றம் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் காலியிடம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தப் பொறுப்புகள் கூடுதலாக அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 26 பேருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

இதில், ஜோதிராதித்ய சிந்தியா, வருண் காந்தி, கைலாஷ் விஜய்வர்ஜியா, தினேஷ் திரிவேதி, சர்பானந்த சோனாவால், மற்றும் பசுபதி பராஸ் உள்ளிட்டோர் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.

நேரு காந்தி குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்தி 2004ஆம் ஆண்டு முறைப்படி பாஜகவில் இணைந்தார். இவர், மூன்று முறை மக்களவைக்கு தேர்வாகியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பிரதமராக மே 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவரது அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீட் சமூகநீதிக்கு எதிரானது- சூர்யா

ABOUT THE AUTHOR

...view details