தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்... - biodiversity conservation between india Nepal

பல்லுயிர் பாதுகாப்புத் துறையில் இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 1, 2022, 6:42 AM IST

டெல்லி: இந்தியா - நேபாளம் இடையே வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள், இரு நாடுகளுக்கு இடையே ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது, பருவநிலை மாற்ற கண்காணிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக முன்மொழிவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (ஆகஸ்ட் 31) ஒப்புதல் அளித்துள்ளது. உலக பல்லுயிர் பெருக்கத்தில் நேபாளம் 49ஆவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 22,000-க்கும் உயிரினங்கள் உள்ளன. பூக்கும் தாவர இனங்களில் நேபாளம் செழுமையாக உள்ளது. இதில் உலகில் 27ஆவது இடத்தையும் ஆசியாவில் 10ஆவது இடத்தையும் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:நெற்பயிர்களை தாக்கும் போனா வைரஸ்... குட்டையாக வளரும் நெற்பயிர்கள்

ABOUT THE AUTHOR

...view details