டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கடந்த 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புதிய ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.