புதுச்சேரி கதிர்காமம் அருகே உள்ள இந்திரா நகரில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த பள்ளி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் பள்ளியில் வாக்களார் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 2) தேர்தல் துறையை சேர்ந்த அலுவலர்கள் பள்ளிக்கு வந்தபோது தலைமை ஆசிரியர் அலுவலகம் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டு - புதுச்சேரி அரசு பள்ளியில் கணினி திருட்டு
புதுச்சேரி: அரசு பள்ளியில் கணினி, சிசிடிவி கேமிரா உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பள்ளியின் பின் பக்க கேட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளி வாளகத்திற்குள் வந்து தலைமை ஆசிரியர் அறை, வகுப்பறைக்குள் வைக்கப்பட்டிருந்த கணினி, சிசிடிவி, ப்ரொஜெக்டர் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.