தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற உறவினர்: சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்! - வழக்குப்பதிவு

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற உறவினர், சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றி, கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Uncle
Uncle

By

Published : Sep 7, 2022, 3:44 PM IST

நெல்லூர்:ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது நெருங்கிய உறவினர்(மாமா), வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சிறுமி கழிப்பறைக்குள் சென்று கதவை மூட முயன்றார்.

ஆனால், கழிப்பறைக்குள்ளும் நுழைந்த அந்த நபர், சிறுமியிடம் அத்துமீறினார். சிறுமி ஒத்துழைக்காததால் ஆத்திரமடைந்த நபர், கழிப்பறையில் இருந்த ஆசிட்டை எடுத்து சிறுமியின் வாயிலும், முகத்திலும் ஊற்றினார். வலி தாங்காமல் சிறுமி அலறியதால், வெளியே சத்தம் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது உறவினருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...காவல் உதவி ஆய்வாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details