உதய்பூர்:ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர், அந்த சிறுமியை கொலை செய்துடன் உடலை பல துண்டுகளாக வெட்டி உள்ளார். இந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உதய்பூர் எஸ்பி விகாஸ் சர்மா கூறுகையில், உதய்பூரில் வசித்து வந்த சிறுமியின் பக்கத்து வீட்டிலேயே அந்த இளைஞரும் வசித்து வந்தார். இவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
மார்ச் 29ஆம் தேதி சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த இளைஞர் சிறுமியிடம் சென்று வீடியோ கேம் விளையாடலாம் என்று கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்த நேரத்தில் அந்த இளைஞரின் வீட்டில் யாருமில்லை. இவரது பெற்றோர் வீட்டிற்கு வருவதற்குள் சிறுமியின் உடலை அப்புறப்படுத்த எண்ணி, அந்த உடலை பல துண்டுகளாக வெட்டியுள்ளார். இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெட்டப்பட்ட உடலை வீசிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிரவே தனது 8 வயது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.