தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உதய்ப்பூர் டெய்லர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது! - நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர் கொலை

உதய்ப்பூர் கன்ஹையா லால் கொலை வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

Udaipur
Udaipur

By

Published : Aug 10, 2022, 8:58 PM IST

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் தையல்காரர் கன்ஹையா லால் கடந்த ஜூன் 28ஆம் தேதி, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காகவே கன்ஹையா லால் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. இந்த வழக்கை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கெளஸ் முகமது மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கரைச் சேர்ந்த கான் ராசா என்பவரை என்ஐஏ சிறப்புக்குழு கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான கெளஸ் முகமதுவுடன் கான் ராசா தொடர்பில் இருந்ததாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கொலை செய்ய 40 பேர் குழு - தேடும் பணியில் என்ஐஏ

ABOUT THE AUTHOR

...view details