உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசமாநிலம், ரே பரேலியில் போலி ரூபாய் நோட்டுகளை தயாரித்த இரண்டு இளைஞர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். சமூக வலைதளத்தில் யூடியூப் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு 99 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகளை இரண்டு இளைஞர்களும் தயாரித்துள்ளனர்.
லால்கன்ஜ் பகுதியைச் சேர்ந்த போலீசார் மகிபல் பதக் கூறுகையில், ''லால்கன்ஜ் பகுதியில் உள்ள ஐகர் கிராமத்தில் உள்ள பல்கேஷ்வர் சிவன் கோயிலில் வெளியே கண்காட்சி நடைபெற்றது. அப்போது இந்த இரண்டு இளைஞர்கள் தயாரித்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அப்போது இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தியபோது உண்மை தெரிய வந்தது.
இந்த இரண்டு இளைஞர்கள் கண்காட்சியில் போலி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி விலையுயர்ந்த பொருட்களை வியாபாரிகளிடமிருந்து வாங்க வந்துள்ளனர். அப்போது எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கண்காட்சிக்கு வந்த போது இரண்டு இளைஞர்களையும் கைது செய்தோம்'' என கூறினார்.
இதையும் படிங்க: குரான் எரிப்பு சம்பவம்... ஐநா மனித உரிமை சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு!
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பியுஷ் வர்மா மற்றும் விஷால் ஆகியோரிடமிருந்து போலீசார் 99,500 ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பிரிண்டர், ஸ்கேனர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். போலீசார் அந்த இளைஞர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் இரண்டு பேரும் யூடியூப் வீடியோக்களால் ஈர்க்கப்பட்டு போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரித்துள்ளனர்.
யூ-டியூப் மூலம் போலி ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் முறையை கற்றுக் கொண்ட இளைஞர்கள் பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் ஆகிய உபகரணங்களை வைத்து போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரித்துள்ளனர். மேலும் இந்த இரண்டு இளைஞர்களும் போலி ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடைகளில் மளிகை பொருட்களை வாங்கியுள்ளனர். மேலும் இந்த போலி ரூபாய் நோட்டு விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என லால்கன்ஜ் பகுதி போலீசார் மகிபல் பதக் கூறினார்.
இதையும் படிங்க: கேரள பேராசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட வழக்கு - 6 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு!