இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில்,
சீனக் கடலில் 39 இந்தியர்களுடன் 2 சரக்கு கப்பல்கள் நங்கூரம் - வெளியுறவுத்துறை அமைச்சகம் - சீனக் கடலில் 39 இந்தியர்களுடன் 2 சரக்கு கப்பல்கள் நங்கூரம்
டெல்லி: 39 இந்தியர்களுடன் இரண்டு சரக்கு கப்பல்கள் சீனக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் உள்ள ஜிங்டாங் துறைமுகம் அருகே எம்.வி.ஜக் என்ற சரக்கு கப்பல் ஜூன் 13ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், 23 இந்திய மாலுமிகள் உள்ளனர். மற்றொரு கப்பலான எம்வி அனஸ்தேசியா, சீனாவின் காஃபீடியன் துறைமுகத்துக்கு அருகே செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், 16 மாலுமிகள் உள்ளனர்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரகம் அந்நாட்டு அலுவலர்களுடன் தொடர்பில் உள்ளது. கப்பல்களையும், மாலுமிகளையும் அந்நாட்டு அரசு விடுவிக்க இந்திய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக துறைமுகங்களிலிருந்து கப்பல்களை விடுவிக்க சீன அரசு மறுத்து வருகிறது. இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சீன அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.