புது டெல்லி:மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (டிச 28) காலை தனது டிவிட்டர் பக்கத்தில் புதியதாக இரண்டு தடுப்பூசிகள் மற்றும் அவசரக் காலத்தில் உபயோகிக்கக்கூடிய மருந்திற்கும் (Anti-viral drug Molnupiravir) அனுமதி அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு Corbevax Vaccine (கோர்ப்வாக்ஸ்) மற்றும் Covovax Vaccine (கோவோவக்ஸ்) என பெயரிடப்பட்டுள்ளது.
"Corbevax தடுப்பூசி, கோவிட்19க்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட RBD புரோட்டீன் தடுப்பூசி ஆகும். இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-E நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி ஆகும்" என மன்சுக் எல். மாண்டவியா தெரிவித்துள்ளார்.