குப்வாரா (காஷ்மீர்): நேற்று (ஜூன்6) வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கண்டி பகுதியில், காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழுவானது கண்டியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. இந்த கூட்டுப் படைகள் சந்தேகப்படும் இடத்தை நோக்கிச் சென்றபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகளின் படைகள் மீது பாதுகாப்பு படை துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை - காஷ்மீர் சம்பவம்
காஷ்மீரின் கண்டி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக, காஷ்மீர் ஐஜிபி சார்பாக காஷ்மீர் காவல் மண்டலம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில், ஒருவர் துஃபைல் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதி. மேலும், தொடர்ந்து பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை தேடி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை