கர்நாடகா: கர்நாடக மாநிலம், கலாபுரகி மாவட்டம், வாடி நகரில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய்(25) என்ற இளைஞர், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் விஜயும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த அப்பெண்ணின் சகோதரர் ஷஹாபுதீன், விஜயின் வீட்டுக்குச் சென்று, அவரது தாயாரை எச்சரித்துள்ளார். தனது சகோதரியை காதலிப்பதை விட்டுவிடவில்லை என்றால், விஜயின் தலையை கொய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.