புதுச்சேரி: திலாஸ்பேட்டை கனகன் ஏரி பகுதியில் கஞ்சா (cannabis) விற்பனை செய்வதாக கோரிமேடு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் கனகன் ஏரி (Kanagan Lake) பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் வழுதாவூரைச் சேர்ந்த கார்த்தி (27), மணி (22) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தனர்.