ட்விட்டர் நிறுவனம், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை நீக்கியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக, எவ்வித பதிவுகளும் அவரது கணக்கில் பதிவிடாததால், ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ட்விட்டர் கணக்கு உண்மையானது என்பதை உறுதிப்படுத்தப்பட்டதற்கு அடையாளமாகக் குறிக்கப்படும் ப்ளூ டிக், நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டாக எவ்விதப் பதிவுகளும் பதிவிடாத கணக்குகளில் 'ப்ளூ டிக்' இருக்கும் ஸ்கீரின்ஷாட்-களை ட்விட்டர்வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.
வெங்கையா நாயுடு ட்விட்டர் கணக்கில் 'ப்ளூ டிக்' நீக்கம் இதற்கிடையில், பாஜக மும்பை செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா தனது ட்விட்டரில், துணை குடியரசுத் தலைவரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை நீக்கியதை குறித்து கேள்வி எழுப்பியதோடு மட்டுமின்றி, இச்செயல் 'இந்திய அரசியலமைப்பு மீதான தாக்குதல்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.