அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், தெற்கு கரோலினா மாகாணத்தில் வெற்றி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவதற்கு முன்பே அங்கு ட்ரம்ப் வெற்றிபெற்றுவிட்டதாக அவரின் பரப்புரை ட்விட்டர் பக்கம் தகவல் வெளியிட்டது. உறுதிப்படுத்தப்படாத தகவலை பகிர்ந்த காரணத்தால் அந்த பதிவுக்கு ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு கரோலினா மாகாணத்தில் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், சிஎன்என் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இருந்தபோதிலும், தேர்தலுக்காக வகுக்கப்பட்ட விதிகள் மீறப்பட்டுவிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை ட்விட்டர் குறிப்பிட்ட ஏழு செய்தி நிறுவனங்களில் இரண்டு உறுதிப்படுத்தினால் அதனை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.