டெல்லி:இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "போலியான செய்திகள் பரவுவதை தடுக்கவே இடையீட்டாளர்களுக்கான நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், ட்விட்டர் நிர்வாகம் அதனைப் பின்பற்ற தவறிவிட்டது.
பேச்சு சுதந்தரத்தை காக்க கொடிபிடித்து செல்வதுபோல் தன்னைக் கருதிக்கொள்ளும் ட்விட்டர் நிர்வாகம், இடையீட்டாளர்களுக்கான நெறிமுறைகளை ஏற்கும் விஷயத்தில் தவறான பாதையில் செல்கிறது.
இதுபோக, பயனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் ட்விட்டர் நிர்வாகம் தவறிவிட்டது.
அமெரிக்காவில் தொழில்தொடங்கும் இந்திய நிறுவனங்கள் அந்நாட்டின் சட்டதிட்டங்களை தாமாக முன்வந்து பின்பற்றுகின்றன. அப்படியிருக்கையில், ட்விட்டர் நிர்வாகம், இந்தியச் சட்டங்களை பின்பற்ற தயங்குவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:’ரொனால்டோ அடித்த ரியல் சிக்ஸர்' - அன்புமணி பாராட்டு