தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகை துனிஷா சர்மா தற்கொலைக்கு காரணம் என்ன தெரியுமா? - முன்னாள் காதலன் ஷீசன் முகமது கான் கைது

நடிகை துனிஷா சர்மா தற்கொலை வழக்கில் அவரது முன்னாள் காதலன் ஷீசன் முகமது கான் கைது செய்யப்பட்டார். காதல் தோல்வியால் துனிஷா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tunisha
Tunisha

By

Published : Dec 25, 2022, 7:15 PM IST

தானே: மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில், இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா(20) நேற்று(டிச.24) அகால மரணமடைந்தார். 'அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்' என்ற சீரியலில் துனிஷா சர்மா நாயகியாக நடித்து வந்த நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் மேக்அப் அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேக்அப் அறையிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், துனிஷா ஷர்மா தற்கொலை வழக்கில், அவரது சக நடிகரும் முன்னாள் காதலனுமான ஷீசன் முகமது கானை போலீசார் கைது செய்துள்ளனர். ஷீசன் முகமது கானும், துனிஷா ஷர்மாவும் காதலித்து வந்ததாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. காதல் தோல்வியால் துனிஷா ஷர்மா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

துனிஷாவுடன் நடித்த மற்றொரு நடிகரான பார்த் ஜூட்ஷியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தனக்கு துனிஷாவின் காதல் வாழ்க்கைப் பற்றி தெரியாது என்றும், அவர் மன அழுத்தத்தில் இருந்தது மட்டுமே தெரியும் என்றும் பார்த் கூறினார். மன உளைச்சலில் இருந்தபோதும் துனிஷா எந்தவித போதைப்பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Tunisha Sharma: பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details