தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி: இன்று முதல் இலவச டிக்கெட்டுகள் விற்பனை - திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி

ஆந்திரா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (பிப். 15) காலை முதல் தரிசனத்திற்கான இலவச டிக்கெட் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி!-இன்று முதல் தேவஸ்தானத்தில் இலவச தரிசன  டிக்கெட்டுகள்
திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி!-இன்று முதல் தேவஸ்தானத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகள்

By

Published : Feb 15, 2022, 9:34 AM IST

Updated : Feb 15, 2022, 10:24 AM IST

திருப்பதி: கரோனா தொற்று தாக்கத்தினால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (பிப். 15) முதல் நேரடியாக தேவஸ்தானத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் கரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த நடைமுறை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இலவச டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த டிக்கெட் மூலம் நாளை (பிப். 16) ஏழுமலையான் தரிசனம் செய்யலாம்.

தரிசன டிக்கெட்டுகள் பூதேவி சன்னிதானம், ஸ்ரீனிவாசா சன்னிதானம், ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் தரப்படும் என தேவஸ்தானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Horoscope: பிப்ரவரி 15 இன்றைய ராசிபலன் - உங்க ராசி எப்படி?

Last Updated : Feb 15, 2022, 10:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details