தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் கரோனாவால் உயிரிழப்பு - திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 60 வயது மதிக்கத்தக்க அர்ச்சகர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப். 30) உயிரிழந்தார்.

திருப்பதி செய்திகள்
திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர் கரோனாவால் உயிரிழப்பு:

By

Published : May 2, 2021, 5:21 PM IST

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அர்ச்சகர் ராமச்சந்திரன், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப். 30) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று ஏப்.29ிள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் துணை நிர்வாக அலுவலர் நாகராஜனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்தவர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் வெவேறு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது அலையின் போது 100-க்கும் மேற்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 25 பணியாளர்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் சூப்பர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லி குருத்வாரில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி வழிபாடு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details