தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புரட்டாசி முடியும் வரை திருமலை - திருப்பதிக்கு வருவதைத்தவிர்த்திடுக':பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்! - பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

புரட்டாசி மாதம் முடியும்வரை முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளின் பெற்றோர் திருமலை - திருப்பதிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

TTD
TTD

By

Published : Aug 11, 2022, 8:26 PM IST

திருப்பதி: திருமலை - திருப்பதியில் வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், வரும் 15ஆம் தேதி சுதந்திரம் வரை தொடர் விடுமுறைகள் வருகின்றன.

இதனால் திருமலை - திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துக்காணப்படுகிறது. எனவே முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் திருமலை - திருப்பதிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வரும் 19ஆம் தேதி கோகுலாஷ்டமியும், அதையொட்டி வார விடுமுறையும் வருவதால், இந்த 3 நாட்களிலும் பக்தர்கள் திருமலை - திருப்பதிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் 18ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்குவதால், அப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால், திருப்பதிக்கு வர விரும்பும் பக்தர்கள் புரட்டாசி மாதம் முடிந்து வரும்படி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:Raksha Bandhan 2022: எதற்காக கொண்டாடப்படுகிறது ரக்‌ஷா பந்தன்..! காரணம் என்ன..?

ABOUT THE AUTHOR

...view details