அகர்தலா(திரிபுரா): திரிபுரா பழங்குடியினர் பகுதி தன்னாட்சி மாவட்ட கவுன்சிலில் (TTAADC) கிராம சபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணி (IPFT- Indigenous People's Front of Tripura) கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பிரிஷகேது டெபர்மா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மாநில சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, திரிபுரா சட்டப்பேரவையின் சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தி கூறுகையில், "ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கும்போது, அவர்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க சபாநாயகர் முன் நேரடியாக வந்து அளிக்கப்பட வேண்டும், ஆனால் டெபர்மா அப்படி செய்யவில்லை.
மறுபுறம், கட்சி சாசனத்தை மீறியதாகக் கூறி, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்கீழ் பிரிஷகேது டெபர்மாவுக்கு எதிராக வழக்குத்தொடர சபாநாயகர் அலுவலகத்தை IPFT தலைவர் நரேந்திர சந்திர டெபர்மா அணுகியுள்ளார். மேலும் மாநிலங்களவைத் தேர்தலின்போது பிரிஷகேது டெபர்மா கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டுள்ளார்.