தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி. இடைநீக்கம்.. எஞ்சிய கூட்டங்களில் பங்கேற்க தடை! - மாநிலங்களவையில் எம்பி டெரெக் ஓ பிரையன் இடைநீக்கம்

டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதத்தின் மீது இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையனை எஞ்சிய மழைக் கால கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

MP
MP

By

Published : Aug 8, 2023, 1:59 PM IST

டெல்லி :மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருடன் காரசார விவாதம் செய்ததை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஒ பிரையன் நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்ற போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் தொடர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. டெல்லி சேவைகள் மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்ற போது அவையின் முன் வந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஒ பிரையன் கூச்சல் போட்டதாகவும், அவை நாகரீகத்தை மீறி நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

விவாதத்தின் போது அவர் தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தியதாகவும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவை தலைவர் பியூஷ் கோயல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையனை நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அவை தலைவர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரின் எஞ்சிய கூட்டங்களில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையனை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் பணியிடை மாற்றம் தொடர்பாக அதிகாரம் அளிக்கும் டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் மசோதா மீது விவாதம் நடத்தப்பட்ட போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியில் மாநிலங்களவையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, மற்றும் பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது. டெல்லி சேவைகள் மசோதா, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்கவும், டெல்லியின் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதலாக அதிகாரம் வழங்கவும் வழி செய்வதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த மசோதா டெல்லி அரசின் செயல்பாடுகளை துணைநிலை ஆளுநர் கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதால் நிர்வாக சிக்கல் உருவாக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காரசார விவாதம்.. பிரதமர் மவுனவிரதம் கலைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details