புரெவி புயல் காரணமாக, புதுச்சேரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. மேலும் கனமழையும் பெய்துவரும் நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியான எஸ்.வி. பட்டேல் சாலையின் ஓரமாக உள்ள 25 ஆண்டுகால பழமையான மரம் ஒன்று, மழையின் காரணமாக இன்று (டிச. 03) அதிகாலை வேரோடு சாய்ந்தது.
புதுச்சேரியில் பழமையான மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு - Tree
புதுச்சேரி: தொடர் மழை காரணமாக பழமையான மரம், சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
Pondicherry traffic
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித் துறையினர், தீயணைப்புத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பல மணி நேரம் போராடி, சாய்ந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் மரம் விழும்போது அவ்வழியாக யாரும் வராத காரணத்தால், நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.