தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்யாண விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 300 பேருக்கு ஒவ்வாமை! - food poison

மஹாராஷ்டிராவில், கல்யாண விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு
உணவு

By

Published : May 23, 2022, 3:04 PM IST

மஹாராஷ்டிரா மாநிலம், லதூர் மாவட்டம், நிலங்கா தாலுகாவில் உள்ள அம்புலகா கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், உணவு சாப்பிட்ட சுமார் 300 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் நிலங்கா மாவட்ட துணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இறைச்சி, மீன், முட்டை, பால்பொருட்கள் ஆகிய உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு செய்ய திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details