தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூருவில் விமான விபத்து; சர்வதேச ஸ்கைடைவ் வீரர் காயம்! - பெங்களூருவில் விமான விபத்து

இது ஒரு டெயில் வீல் விமானம், அது ஓடுபாதையில் இடதுபுறம் சாய்ந்து கவிழ்ந்தது. ஸ்டெர்ன்ஸ் சிறிய காயங்களுக்கு உள்ளார். விமான ஓடுபாதையில் நாய் மற்றும் பறவை குறுக்கே புகுந்ததால் இந்த விமான விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.

aircraft
aircraft

By

Published : Apr 19, 2022, 9:22 AM IST

பெங்களூரு: விமான ஓடுபாதையில் நாய் மற்றும் பறவை குறுக்கே புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. பெங்களூரு ஜக்கூர் ஏரோட்ரோமில் உள்ளூர் போர் விமானம் ஒன்று தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விமான விபத்தில் சர்வதேச ஸ்கை டைவிங் சாம்பியன் செரில் ஆன் ஸ்டெர்ன்ஸ் காயமுற்றார். மேலும், விமானி கேப்டன் ஆகாஷ் ஜெய்ஷ்வால் காயமின்றி தப்பினார். விபத்துக்குள்ளான விமானம், செஸ்னா 185 விமானம் (VT - ETU) அக்னி ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

பெங்களூருவில் விமான விபத்து; சர்வதேச ஸ்கைடைவ் வீரர் காயம்!

விமானம் தரையிறங்கும் நேரத்தில் பறவைகள் கூட்டம் அல்லது நாய்கள் கூட்டம் குறுக்கே புகுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அலுவலர் ஒருவர், “இது ஒரு டெயில் வீல் விமானம், அது ஓடுபாதையில் இடதுபுறம் சாய்ந்து கவிழ்ந்தது.

ஸ்டெர்ன்ஸ் சிறிய காயங்களுக்கு உள்ளார், அவர் பரிசோதனைக்காக கொலம்பியா ஆசியா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்” என்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டெர்ன்ஸ், வானத்தில் டைவிங் செய்யும் முறையை கேப்டன் ஜெய்ஸ்வாலுக்கு வழிகாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தெலங்கானாவில் விமான விபத்து: தமிழ் பெண் விமானி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details