திருவனந்தபுரம்:பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார். அங்கு யுவம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் வந்தே பாரத் ரயில், வாட்டர் மெட்ரோ சேவைகளை தொடங்கி வைத்த அவர், டிஜிட்டல் அறிவியல் பூங்காவையும் திறந்து வைத்தார்.
முன்னதாக தனது வாகனத்தில் பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் திரிச்சூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் ஆன்லைனில் மாநில டிஜிபி அனில்காந்த் மற்றும் போக்குவரத்து துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், "கடந்த 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொச்சிக்கு வந்தார். இளைஞர்கள் பங்கேற்ற யுவம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன், தனது காரில் ஊர்வலமாக பயணித்தார். சுமார் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் ஊர்வலமாக சென்றார்.