ராம்நகர் (உத்தரகாண்ட்): ராம்நகருக்கு பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வந்தனர். ராம்நகரில் உள்ள ஆற்றை கடக்கும் முன் எதிர்பாராவிதமாக அவர்கள் வந்த கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 3 ஆண்கள், 6 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை மற்றும் பெண் பத்திரமாக மீட்கப்பட்டதாக ராம்நகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தின் கூற்றுப்படி உள்ளூர் மக்களுடன், பஞ்சாப்பைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகளும் காரில் இருந்ததாக கூறப்படுகிறது.