தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 30, 2020, 8:49 AM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் உருமாறிய கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு

இந்தியாவில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் படையெடுக்கும் உருமாறிய கரோனா!
இந்தியாவில் படையெடுக்கும் உருமாறிய கரோனா!

டெல்லி:இந்தியாவில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 6 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று புதிதாக 14 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனிலிருந்து, சமீபத்தில் இந்தியா திரும்பியவர்களில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் உள்பட, 20 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து பரிசோதனைகள் தீவிரமடைந்துள்ளன.

அச்சுறுத்தும் கரோனா

மரபணு உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் பரவல், பிரிட்டனில் தீவிரமடைந்துள்ளது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும், இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாது, கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை, பிரிட்டனிலிருந்து, இந்தியா வந்த சுமார் 33 ஆயிரம் பயணிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் எத்தனை பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 6 பேருக்கு உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், இன்று புதிதாக 14 பேருக்கு இந்த உருமாறிய கரோனா பாதிப்பு இருப்பதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் இந்தப் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் குறைந்து, மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவரும் நிலையில், இந்தப் புதியவகை கரோனா பாதிப்பு பரவிவருவது 2021ஆம் ஆண்டும் சோதனை ஆண்டாவே அமையுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இது தோற்ற வேறுபாடுதான் புது வைரஸ் அல்ல: உருமாறிய கரோனா குறித்து அறிவியலாளர் டிவி வெங்கடேஸ்வரன் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details