ஹந்த்வா : ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி மெஹ்ராசுதீன் ஹல்வாய் என்ற உபேத் சுட்டுக்கொல்லப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கொலை! - ஹிஸ்புல் முஜாகிதீன்
09:55 July 07
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹல்வாய் என்ற உபேத் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹல்வாய் என்ற உபேத் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹல்வாய் என்ற உபேத் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க :தொழுகை முடிந்து வீடு திரும்பிய காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை!