தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9AM - செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 11, 2021, 9:18 AM IST

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடுகிறது.

2. உஷ்ணத்தைத் தணிக்கும் தொப்புள் -மருத்துவ ரகசியம்

தொப்புள் உடலில் உள்ள சிறிய புள்ளி என்பதை விட, பல்வேறு பிரச்னைகளுக்கு திறவுகோலாக அமைகிறது. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, உடலைப் பாதுகாப்போம்.

3. 'வீடு தேடி வருகிறது டோக்கன்' - அடுத்தது என்ன?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருள்கள் வழங்கும் திட்டத்திற்கான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

4. கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை!

வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஜூன் 11) கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. #HBD சத்யன்: ஹே தோத்தாங்குளீஸ் ஹாவிங் ஃபன்னா... "பிறந்தநாள் வாழ்த்துகள் சைலன்சர்"

நகைச்சுவை நடிகர் சத்யன் தனது 46ஆவது பிறந்தநாளை இன்று (ஜூன்.11) கொண்டாடி வருகிறார்.

6. தவான் கேப்டன், நடராஜன் அவுட்: இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான இந்திய ஒருநாள், டி20 அணிக்கு கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனுக்கு அணியில் வாய்ப்பளிக்கபடவில்லை.

7. 'பள்ளிகளின் கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்' அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகளின் கட்டமைப்பு வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

8. என்னது மீண்டும் திருமணமா?- வனிதா விஜயகுமார் விளக்கம்

தனக்கு மீண்டும் திருமணமாகியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

9. ஒரேநேரத்தில் 5 படங்களில் சிவகார்த்திகேயன்..... சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரேநேரத்தில் 5 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10. ரகளை செய்த ரவுடிக்கு காவல் நிலையத்தில் பாடம்!

சாலையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களைத் தாக்கிய ரவுடியைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details