தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - latest news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

top 10 news at 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm

By

Published : Mar 21, 2021, 5:07 PM IST

பச்சைத் துண்டு பழனிசாமி தற்போது பச்சோந்தி பழனிசாமி - ஸ்டாலின் சாடல்

பச்சைத் துண்டு பழனிசாமி தற்போது பச்சோந்தி பழனிசாமியாக மாறியுள்ளார் எனவும்; பாம்பு, பல்லியைவிட விஷமானது துரோகம்தான் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மீன்சந்தையில் பரப்புரையைத் தீவிரப்படுத்திய திமுக நிர்வாகி

திமுக வேட்பாளர் காதர் பாட்சா மீன் சந்தை, காய்கறிச் சந்தைகளில் மக்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

திமுகவில் உழைக்கும் தொண்டர்கள் ஓரம்கட்டப்படுவர் - அன்புமணி தாக்கு

திமுகவில் அதிகம் உழைத்த தொண்டர்கள் ஓரம் கட்டப்பட்டுவிட்டார்கள். திமுகவின் நோக்கமே தங்களது குடும்ப வாரிசுகள் அரசியலில் வர வேண்டும் என்பதுதான் என பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

கேரளா: வெங்கரா தொகுதியில் முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் போட்டி

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், கேரள மாநிலத்தின் வெங்கரா தொகுதியில் முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் போட்டியிடுகிறார்.

சிசிஏவை கைவிடும் வாய்ப்பு இல்லை - சி.டி. ரவி பதில்

சிசிஏவை கைவிடும் வாய்ப்பு இல்லை என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி. ரவி பதிலளித்துள்ளார்.

பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா? அறிக்கை கேட்கும் அரசு

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்லூரிகளின் நேரடி வகுப்பிற்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக உயர் கல்வித் துறையிடம் அரசு அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே மனைவியை கொலை செய்த கணவர்

விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஒரு மாதத்திலேயே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

ஆல் இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி!

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

"மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வி.ஐ.பி பிலிம் வழங்கும் இயக்குநர் விக்டர் இம்மானுவேலின் "மரபு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

முத்தம் கொடுப்பீங்களா?- ரசிகர் கேட்ட கேள்விக்கு கேஷுவலாக பதில் சொன்ன ஜான்வி

ரசிகர் ஒருவர் முத்தம் குறித்து கேட்ட கேள்விக்கு நடிகை ஜான்வி கபூர் கேஷுவலாக பதில் கூறிய விதம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details