தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திஷா ரவிக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் ட்வீட்! - கிரேட்டா தன்பெர்க் செய்திகள்

டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஆதரவாக சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார்.

கிரேட்டா தன்பெர்க் ட்வீட்
கிரேட்டா தன்பெர்க் ட்வீட்

By

Published : Feb 20, 2021, 4:23 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலீபா குரல் கொடுத்திருந்தனர்.

கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த டூல்கிட்டை உருவாக்கியது பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி எனக் கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து நேற்று (பிப்.19) திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். non negotiable

கிரேட்டா தன்பெர்க் ட்வீட்

இந்நிலையில், சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஆதரவாக சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்துள்ளார். அதில், "பேச்சு சுதந்திரம், அறவழியிலான எதிர்ப்பு, மனித உரிமைகள். இவைகள் ஜனநாயகத்தின் அடிப்படை இருக்க வேண்டும்" எனக் கருத்து பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த பதிவில் "StandWithDishaRavi" என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க...திஷா ரவியின் தனியுரிமையைப் பாதுகாப்பது அவசியம் - டெல்லி உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details