தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருட்டு - டைமிங் அபேஸ்! - தக்காளி விலை உயர்வு

தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளியை விவசாய நிலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சுமார் 2.5 லட்சம் மதிப்பில்லான தக்காளிகள் திருட்டு!
கர்நாடகாவில் சுமார் 2.5 லட்சம் மதிப்பில்லான தக்காளிகள் திருட்டு!

By

Published : Jul 6, 2023, 2:36 PM IST

கர்நாடகா: ஹாசன் மாவட்டத்தின் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் பெண் விவசாயியின் விவசாய இடத்தில் இருந்து 50 முதல் 60 தக்காளி மூட்டைகளை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று(ஜூலை 5) திருடிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

விவசாயி தாரிணி மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளியைப் பயிரிட்டிருந்தனர். அதனை அறுவடை செய்து பெங்களூரு சந்தைக்குக்கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தனர். அப்போது, இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாரிணி இந்தச் சம்பவம் குறித்து பேசுகையில், ''தாங்கள் கடன் வாங்கி தக்காளி பயிரிட்டோம். நல்ல விளைச்சல் இருந்தது.

தற்போது தான் தக்காளியின் விலையும் அதிகரித்தது. இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் 50-60 தக்காளி மூட்டைகளை திருடிச் சென்றது மட்டும் இல்லாமல் மீதம் இருந்த பயிரையும் அழித்துவிட்டனர். அவர்கள் திருடிய தக்காளியிள் விலை சுமார் 2.5 லட்சம் ரூபாய் இருக்கும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஷூ திருடிய இருவருக்கு ரூ.41,000 அபராதம் விதிப்பு!

இதுகுறித்து தாரிணி அளித்தப் புகாரின் பேரில் ஹளேபீடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து ஹளேபீடு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''இதுவரை தக்காளியை திருடியதாக கேள்விப்பட்டதில்லை மற்றும் காவல் நிலையத்தில் இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை'' என தெரிவித்தனர். தாரிணி மாநில அரசிடம் தங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. பெங்களூருவில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.101 முதல் 121 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்ததால் தக்காளி பயிர்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருட்டு!

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது தக்காளியின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை சுமார் ரூபாய் 100ல் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த இந்த திருட்டுச் சம்பவம் பல இடங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details