மேஷம்:பொதுத்துறை மற்றும் மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்கள் முயற்சியின் மூலம், நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை முடித்து விடுவீர்கள். உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்: உங்களுக்கு இன்று படைப்பாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மை அதிகம் இருக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக, உடன் பணிபுரிபவர்களை ஆச்சரியத்தில் வாழ்த்துவீர்கள். பணியில் நீங்கள் பெரிய சாதனைகளை செய்வீர்கள்.
மிதுனம்: இன்று உணர்வுரீதியாக நீங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும். உங்களது மூளை சொல்வதை கேட்காமல், உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அதனால், உங்களுக்கு நல்லவர்களை அடையாளம் காண முடியாமல் போகும். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம் உங்களது பாதிப்பை குறைக்கும்.
கடகம்:வளமான எதிர்காலத்திற்கான உங்கள் திட்டம், இன்று பலனளிக்க தொடங்கும். உங்களது அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவீர்கள். அதுகுறித்து நீங்கள் நீண்ட காலமாக சிந்தித்து வருவதால், இந்தப்பணி எளிதாகும். நீங்கள், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்று, இந்த நாள் மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும்.
சிம்மம்:புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு, பணிகளை சிறந்த வகையில் செய்து முடிப்பீர்கள். உறவுகளை பராமரிப்பதில் தடங்கல்கள் வந்தாலும், அனைத்தும் சுமூகமாக தீர்க்கப்பட்டு விடும்.
கன்னி:இன்று நீங்கள் குடும்பத்தினரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களது சிறந்த பேச்சு திறன் காரணமாக, சச்சரவுகள் அனைத்தும் எளிதாக தீர்க்கப்பட்டு விடும். உங்களது அமைதியான பொறுமையான நடைமுறை, வாழ்க்கையை எளிதாக்கி உங்களுக்கு பல பாடங்களை கற்றுத்தரும்.
துலாம்:இன்று, உங்களுக்கு சுவையான உணவுகளை சுவைத்து மகிழும் ஆர்வம் இருக்கும். அனைத்து வகையான உணவுகளையும் சுவைத்து மகிழ்வீர்கள். உங்களுக்குப் பிடித்த பணியை, நீங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனாலும், ஏதேனும் ஒரு விஷயம் குறித்த கவலை மனதில் இருக்கும். கடவுளை மனதில் நினைத்து, சரியான தேர்வை எளிதாக மேற்கொள்ளலாம்.
விருச்சிகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் பரப்பும் ஒரு கருவியாக இருப்பீர்கள். அனைத்து மக்களின் அன்பைப் பெறுவீர்கள். உங்களை சிலர் போட்டியாக நினைக்கலாம். உங்களைப் பார்த்து சிரிக்கும் உலகை, நீங்கள் பார்த்து சிரிக்கலாம். மகிழ்ச்சியை பரப்பினால், அது பத்து மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
தனுசு: பணியில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கலாம். அதனால், பணியில் நீங்கள் மூழ்கி விடுவீர்கள். ஆனால், மாலைப் பொழுதில் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.
மகரம்: சட்டம் வழக்கு ஏதேனும் இருந்தால் அதை தீர்க்க நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாக, உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். நீங்கள், புரோக்கர் அல்லது ஒப்பந்தக்காரராக இருந்தால், நிதி இழப்பு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
கும்பம்:இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவழித்து, அவர்களுடன் கடைகளுக்கு செல்வீர்கள் அல்லது சுற்றுலா செல்வீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினருடன் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள்.
மீனம்:இன்று, நீங்கள் மக்களின் தேவையையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். அதனால் அவர்களது ஆசி உங்களுக்கு கிடைக்கும். உங்களது மேலதிகாரிகள், சக பணியாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சகோதரர்கள் என அனைவரையும் திருப்திப் படுத்துவீர்கள். உங்களது, சிறந்த தன்மைகளை நீங்கள் இழக்காமல் இருக்க வேண்டும்.