தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிரக நிலைகள் உச்சம் பெறும் ராசிகள்! - தமிழ் காலண்டர்

ஆடி 10, ஜூலை 26 புதன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 26, 2023, 6:24 AM IST

மேஷம்: மனதிற்கு பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக் கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்கு செல்வீர்கள்.

ரிஷபம்: உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாக பிரச்னைகள் ஏற்படக்கூடும். சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மிதுனம்: மனதுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உதவி கோரும் மக்களுக்கு உதவ முன் வருவீர்கள். அதனால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது தாராள மனப்பான்மை காரணமாக, உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து அனைவரைது நம்பிக்கையையும் பெறுவீர்கள்.

கடகம்: விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம். அதனால் மனம் வருத்தம் கொள்ளலாம். எனினும் அதை திறமையாக கையாண்டு, பாதிப்பில்லாமல் வெளி வருவீர்கள். வெற்றி என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம்: பழைய நட்புகளை புதுப்பிப்பதற்கும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது சிறந்த நாளாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். வீட்டில் குதூகலமான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.

கன்னி: வர்த்தகம் மற்றும் சந்தோஷம் ஆகிய இரண்டும் கைகூடும். சமூக கூட்டங்களால் நன்மை கிடைக்கும். நீங்கள் எந்த அளவிற்கு நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு பணம் செலவாகும். எனினும் சிந்தித்து செலவு செய்வது நல்லது.

துலாம்: அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: உறவுகள், வாழ்க்கையின் வேர்களாகும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

தனுசு: கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், சிறந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் காரணமாக பாராட்டைப் பெறுவீர்கள். பணியில் எந்த விதமான இடர்கள் வந்தாலும் அதனை எளிதாக சமாளிப்பீர்கள். உங்களது அணுகுமுறையின் மூலம் அனைவரது மனங்களையும் வெல்வீர்கள்.

மகரம்: பணியிடத்தில் அங்கீகாரமும், பாராட்டும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்: சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்னைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்னையை பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்: தினசரி பணியை ஒழுங்குபடுத்த அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால், கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே, பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.

இதையும் படிங்க:weekly rasipalan: காதலர்களுக்கு சிறந்த வாரம்!

ABOUT THE AUTHOR

...view details