மேஷம்: இன்று நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றை திட்டமிடுவதைக் காட்டிலும், அதனை செய்வதற்கான ஒரு நேரம். இன்று உங்களால் மலைகளை சுமக்கவும், சமுத்திரத்தைக் கடக்கவும் கூட இயலும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் கொண்டாடி மகிழலாம்.
ரிஷபம்: இந்த நாள் முழுவதும் மூன்று உணர்ச்சிகள் ஆட்கொண்டிருக்கும்; சக்தி, களிப்பு, உற்சாகப் பிரவாகம். அத்தகைய உற்சாகம் எப்போதும் தொற்றிக் கொள்ளக் கூடிது. எனவே உங்கள் அன்புக்குரியவர்களும், அருகாமையில் உள்ளவர்களும் அதனால் இன்புறுவார்கள். நாள் செல்லச் செல்ல நற்பலனும் அதிகரிக்கும். நீங்கள் களைப்பாக உணர்ந்தால், வேலையிலிருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு ஓய்வெடுத்து புத்துணர்வு பெறவும்.
மிதுனம்: இன்று உங்களுடைய காதல் வாழ்க்கை சில ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது. மதியப் பொழுதில் அக்கறையும், கவனிப்பும் கட்டாயமான தேவையாக இருக்கும். பண விவகாரத்தில் அநேகமாக நீங்கள் துணிந்து செயல்படக்கூடும். நிறைய யோசிக்காமல் உங்கள் நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
கடகம்: உங்கள் அவசர மனோபாவம், உங்கள் செயல்பாட்டை பாதிக்கும். நாளின் பிற்பகுதியில், எதிர்மறை கண்ணோட்டங்களைத் தவிர்த்து, நேர்மறை விஷயங்களை மட்டும் கவனிக்கவும். வெறும் சிந்தனை என்றில்லாமல் செயல்படுவதால் நற்பலன்கள் விளையும். மெல்லிசையில் உங்கள் இதயத்தையும், புத்தியையும் லயிக்கச் செய்யுங்கள்.
சிம்மம்: உங்கள் கடமைகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்கள் எச்சரிக்கையுடன் நீதி செய்ய வேண்டும். நீங்கள் பிரச்னைகளை எதிர்கொண்டதற்கு உரிய சன்மானங்களைப் பெறுவீர்கள். உங்கள் நன்மை நாடும் தன்மையும், இயலும் தன்மையும் உங்களை இன்று அமைதியாக வைத்திருக்கும்.
கன்னி: நீங்கள் செல்வாக்கான பதவியை எதிர்பார்க்கலாம். மாலை நேரத்தில் வின்டோ-ஷாப்பிங் செய்யக்கூடும். உங்களுடைய மதியம் வின்டோ ஷாப்பிங் மற்றும் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்குப் பரிசு வாங்குவது என கழியும். உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட கால இலக்குகளை திட்டமிடுவதில் மாலைப் பொழுது கழியும்.