தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Today Horoscope: இன்றைய நாள் எப்படி? 12 ராசிகளுக்கான பலன்கள்! - மகரம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

Today Horoscope
Today Horoscope

By

Published : Apr 2, 2023, 6:38 AM IST

மேஷம்: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். சிறிய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நெடுநாளாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்து விடுவீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொது சேவையில் உள்ளவர்களுக்கு இது ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்: உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன், உணர்வு ரீதியான பிணைப்பு வலுப்படும். முதுமையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சிறிய பிரச்சினைகள் வரலாம், பதட்டமடையாமல் அதனை எதிர்கொண்டால் பிரச்சினைகளில் இருந்து எளிதில் மீண்டு வருவீர்கள்.

கடகம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் உங்களுக்கு பெரிய அளவிலான இழப்புகள் இல்லை என்றாலும், எதையோ தொலைத்து விட்டு தனிமையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். குழந்தைகளைப் பிரிந்ததினால், வீட்டில் நீங்கள் மிகவும் தனிமையாக உணரக்கூடும்.

சிம்மம்: நீங்கள் எடுக்கும் முடிவுகள், மிகவும் சரியான மற்றும் உறுதியான முடிவுகள் ஆக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் வழக்கமான நிலையே இருக்கும். எனினும் நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தனிப்பட்ட உறவைப் பொறுத்தவரை, சிறிய சச்சரவுகள் ஏற்படலாம். அது பெரிய பிரச்சனையாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.

கன்னி: குடும்ப விஷயங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் இன்று உணர்வீர்கள். பரிவர்த்தனைகளைத் திறம்படச் செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். சச்சரவுகள் சுமுகமாகத் தீர்க்கப்படும். நடுநிலைத் தன்மையுடன் செயல்பட்டதன் காரணமாக, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் உணர்வீர்கள்.

துலாம்: நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா அல்லது வெளியூருக்கும் செல்லும் வாய்ப்பு உண்டு. நீங்கள் கோயில் அல்லது ஆன்மீக இடங்களுக்குச் சென்று, உங்கள் எண்ணத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம்: நீங்கள் நெடுநாட்களாகப் பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொருளை, மற்றவர்களுக்கு விட்டுத் தரும் மன நிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உடல்நிலை பாதிக்கப்படலாம் அதனால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைக் கழிப்பதன் மூலம், உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

தனுசு: இன்று, நீங்கள் திடீரென்று குறிக்கோள்களை அடைவதற்காக, பலவகைகளில் பணியை மேற்கொள்வதற்கான எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களை இன்று வழி நடத்தும்; அதன் மீது நம்பிக்கை வைத்துச் செயல்படவும். நீங்கள் சில சவால்களில் வெற்றி பெறலாம். அனைவரும், சவால்களில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புவார்கள் இல்லையா?

மகரம்: ஆரோக்கியம் தான் உண்மையான சொத்து என்பது உங்கள் நம்பிக்கையாகும். இதுவரை நீங்கள் உங்களுடைய உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தியதன் காரணமாக, இன்று அது குறித்து கவலைப்பட தேவையில்லை. தற்போதைய செயல்திட்டங்களை, நிறைவேற்றுவதற்குச் சிறிது காலதாமதம் ஏற்படுமென்றாலும், அதனை நீங்கள் முடித்து விடுவீர்கள். கால தாமதத்தின் காரணமாக, மேலதிகாரிகள், உங்கள் மீது வருத்தம் அடையக்கூடும். நிதி தொடர்பான விஷயங்கள் மீது நீங்கள் அதிகம் சிந்திப்பீர்கள்.

கும்பம்: இன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள். அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவீர்கள். உங்களது அன்பை உணர்ந்து கொண்டு, அவர்கள் உங்கள் மீது பாசத்தை பொழிவார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக ஈடுபாட்டைக் கொண்டிருப்பீர்கள்.

மீனம்: வாழ்க்கையை சுமுகமாக எடுத்துச்செல்ல, அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் முக்கியமாகும். நீங்கள் உங்கள் பணியில், ஆர்வத்துடன் இருந்தால் மட்டுமே, சாதனை படைக்கலாம். நாள் முழுவதும் வேலையில் ஓடிக் கொண்டிருந்தாலும் மாலையில் மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details