தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: நவம்பர் 2 இன்றைய ராசிபலன் - HOROSCOPE on November second

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

TODAY HOROSCOPE: நவம்பர் 2 இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: நவம்பர் 2 இன்றைய ராசிபலன்

By

Published : Nov 2, 2022, 6:28 AM IST

மேஷம்: பணிச்சுமையால் மன அழுத்தம் அதிகமாக ஏற்படலாம். இருந்தாலும், மன அழுத்தத்தால் எதிரிகளுக்கு எந்தவித வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டீர்கள். தாராளமானவராக இருக்கலாம். ஆனால் தேவைப்படும்போது சாதுர்யமாகவும் இருக்கத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள். அனைவருக்கும் ஒரு முன்னோடியாக செயல்படலாம் என்று பரிந்துரைக்கிறோம்.

ரிஷபம்:மன அழுத்தம் வாட்டி எடுக்கும். சிக்கலானதாகவும், கடினமானதாகவும் இருக்கலாம் என்று சொல்லலாம். தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் என்று தோன்றலாம். இயல்பான சாதாரண வாழ்க்கை இருந்தால் போதும் என்ற எண்ணமும் தோன்றலாம்.

மிதுனம்: மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கருத்தை கவனமாக கேட்டு, அவர்களின் பிரச்னைகளை தீர்க்க உதவ வேண்டும். மாலையில், மதம் சார்ந்தவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம்:ஒரு சவாலான மற்றும் சிக்கலான நாளாக இருக்கப் போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. சில பிரச்னைகளை தீர்க்க, சற்றே இலகுவாக இருப்பதும், பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், அன்பானவர்களிடம் அதிக நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சிம்மம்:பங்குதாரர் அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறாது என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கும், கமிஷன் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் இது கடினமான நாள் என்பதால், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். முக்கிய ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்த பிறகே கையெழுத்திடவும்.

கன்னி: திறமையை அதிகரிக்க, இலக்கை அதிகரிப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் தடைகளை தகர்க்க உயர் இலக்குகளை அமைக்க வேண்டும். பிற்பகலில் நிதி நிலைமை பற்றி அதிக கவலை எழும். சின்னஞ்சிறு விஷயங்கள் கூட உறுதியை குலைக்கும். இருந்தாலும் கூட, மாலை நேரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு, இலக்கை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கிறோம்.

துலாம்:மனதில் பழைய நினைவுகள் அலைமோதும். கடந்த காலத்தின் நல்ல நினைவுகளை நினைவில் வைக்க விரும்புவீர்கள். ஒத்த எண்ணம் கொண்டோருடன் அமர்ந்து, கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பு கிட்டும். தத்துவம், மதம் என பலதரப்பட்ட விஷயங்களில் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்றைய மற்றும் எதிர்கால மகிழ்ச்சியை கருத்தில் வைத்து, சிந்திப்பது நன்மையளிக்கும்.

விருச்சிகம்:பல எதிர்பாராத ஆச்சரியங்களை வைத்திருக்கும். பல மர்மங்களை சுலபமாக அவிழ்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். தொழில் ரீதியான கூட்டங்கள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு உங்களுடையதாகவே இருக்கும். சுற்றி இருப்பவர்களை நகைச்சுவையால் மகிழ வைக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நாள்.

தனுசு:காதல் வாழ்க்கைக்கு உகந்த நாள் என்பதோடு, உள்ளம் கவர்ந்தவருடன் முழு நாளையும் செலவழிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கனவுக் கோட்டைகளை கட்டலாம். புதிய ஆடை வாங்கும் வாய்ப்பு தென்படுகிறது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், நண்பர்களுடன் இணைந்து ஷாப்பிங் செய்து பொழுதை இனிமையாக கழிப்பீர்கள்.

மகரம்:அமைதியாக அமர்ந்து, கடந்த காலத்தில் செய்த தவறுகளை பற்றி சிந்திக்க வேண்டும். பணியிடத்தில், அணியின் உறுப்பினராக செயல்பட்டு, வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவீர்கள். இருந்தாலும், முயற்சிகள் கவனிக்கப்படாமலோ அல்லது உரிய பாராட்டையோ பெறாமல் போகலாம். ஏமாற்றம் அளித்தாலும், உங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரியும் என்பதால் அதைப் பற்றி கவலைப்படமாட்டீர்கள்.

கும்பம்:சாதகமான நல்ல நாள். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம், பாடலாம், கும்மாளம் போடலாம், அழலாம். தத்துவங்கள், மதிப்புகள், அரசியல் என பல கருத்துக்களைப் பற்றி பேசலாம். இரவு ஹோட்டல், பீச், என வெளியில் ஜாலியாக சுற்றலாம் அல்லது காதல் துணையுடன் உல்லாசமாக தொலைக்காட்சியை பார்த்து ரசிக்கலாம்.

மீனம்: காதல் உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனை நாளாக இருக்கலாம். வீட்டிலும், அலுவலகத்தைப் போன்றே கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள். கடின உழைப்புக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள். இருந்தாலும், வியர்வை சிந்தி கடுமையாக உழைத்தால், மாலை வேளையை அன்பானவர்களுடன் இணைந்து சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.

ABOUT THE AUTHOR

...view details