தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேலோ இந்தியா போட்டி தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்த உதயநிதி - Khelo games

Udhayanidhi Stalin Met PM Modi: தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 04) நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 8:59 PM IST

சென்னை:கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19 முதல் தொடங்கி 31 தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். இந்நிலையில் இன்று மோடியைச் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி தனது X தளத்தில், “சென்னையில் ஜனவரி 19, 2024 அன்று நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலினின் வேண்டுகோள் படி, தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாகத் தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்து பிரதமருடன் கலந்துரையாடினேன். இந்த சந்திப்பின் போது, 2023ஆம் ஆண்டுக்கான சிஎம் டிராபி விளையாட்டு மற்றும் தமிழ்நாடு நடத்திய ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் ஷிப்பை வெற்றிகரமாக நடத்தியதைக் காட்டும் காபி டேபிள் புத்தகத்தையும் பிரதமரிடம் வழங்கினேன்.

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் நடத்துவதன் மூலம் தமிழகத்தின் அமைப்பு திறன் மற்றும் விளையாட்டுத் துறையின் வரலாற்றை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பாக அமையும்” என பதிவு செய்திருந்தார்.

பிரதமர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை உதயநிதி சந்தித்தார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, "பிரதமர் மோடியை 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு கொடுத்துள்ளேன். அதேபோல ஏற்கனவே, வெள்ள நிவாரண தொகை வேண்டும் என நீங்கள் திருச்சிக்கு வரும் பொழுது கோரிக்கை வைத்திருந்தார். அதை நிறைவேற்றிக் கொடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாபகப்படுத்தச் சொன்னார் என்று சொன்னேன். கண்டிப்பா நிறைவேற்றித் தருகிறேன் என்று சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக நலம் விசாரித்து விட்டுச் செல்கிறேன். அவருடைய பாதயாத்திரையை மணிப்பூரில் தொடங்க இருப்பதாகச் சொன்னார். மற்றபடி நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை” என்றார்.

இதையும் படிங்க:வெள்ள நிவாரண நிதி: தமிழக அனைத்து கட்சி எம்.பி-கள் அமிஷ்சாவை சந்திக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details