தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு - திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பாரகான்ஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஃபாரிக் மொல்லா துப்பாக்கியால் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மினாகான் கிராம மருத்துவமனையிலிருந்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

TMC  Trinamool Congress  Minakhan block  TMC leader shot  North 24 Parganas district  Minakhan Rural Hospital  All India Secular Front  West Bengal  ஃபாரிக் மொல்லா  திரிணாமுல் காங்கிரஸ்  துப்பாக்கிச் சூடு
TMC Trinamool Congress Minakhan block TMC leader shot North 24 Parganas district Minakhan Rural Hospital All India Secular Front West Bengal ஃபாரிக் மொல்லா திரிணாமுல் காங்கிரஸ் துப்பாக்கிச் சூடு

By

Published : Apr 5, 2021, 6:18 PM IST

வடக்கு 24 பாராகான்ஸ்:மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் துப்பாக்கியால் சுடப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பாராகான்ஸ் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஃபாரிக் மொல்லா. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப்.4) துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மினாகான் கிராம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உயர் சிகிச்சைக்காக எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்திந்திய மதசார்ப்பற்ற முன்னணி (ஏஐஎஸ்எஃப்) உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்துவருவதாக காவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகையில், “எதிர்க்கட்சிகள் எங்களை தோல்வியுற செய்ய வன்முறை உள்ளிட்ட பல்வேறு வழிகளை பிரயோகிக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராஜினாமா!

ABOUT THE AUTHOR

...view details